மாலை தீவின் முன்னாள் ஜனாதிபதியை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்!

Date:

மாலைதீவின் சபாநாயகரும், முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீட்டை இலக்கு வைத்து இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (06.05.2021) இரவு இடம்பெற்ற குறித்த தாக்குதல் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது ‌.

குண்டு வெடிப்பை அடுத்து, அவர் ADK வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது காருக்குள் ஏற முற்பட்ட வேளையில் குறித்த குண்டு வெடித்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதால், அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாமெனவும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து அந்நாட்டின் தலைநகரில் இன்று (06) முதல், இரவு 9.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...