தனது முதல்போட்டியில் பதினொரு விக்கெட்களை வீழ்த்தி சாதனை புரிந்த இலங்கை அணியின் இளம் இடது கைசுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்கிரம தன்னை முதன்முதலில் அடையாளம் கண்டு ஊக்குவித்தவர் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பத்து வருடங்களிற்கு முன்னர் களுத்துறையில் உள்ள எனது பாடசாலையான ஹோலி குரொஸ் கல்லூரி பாடசாலையின் வீரர்களிற்காக ஒரு நாள் முழுவதும் பயிற்சிமுகாமை நடத்த திட்டமிட்டது என பாடசாலையின் பழைய மாணவரான சுனில்சில்வா தெரிவித்துள்ளார்.
நாங்கள் அர்ஜூனவை கலந்துகொள்ள முடியுமா என கேட்டோம் அவர் உடனடியாக சம்மதம் தெரிவித்தார் எனவும் பழைய மாணவர் தெரிவித்துள்ளார்.
பிரவீன் தனது முதல் பந்தை வீசியதும் அர்ஜூன அடு;த்த பந்துவீச்சாளரை நிறுத்திவிட்டு பிரவீனுடன் உரையாடியது எனக்கு ஞாபகம் உள்ளது என பழைய மாணவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பிரவீனை மேலும் சில பந்துகள் வீசுமாறு கேட்டுக்கொண்ட அர்ஜூன என்னை பார்த்து இந்த சிறுவன் முன்னாள் வீரர் அஜித் சில்வாவை நினைவுபடுத்துகின்றான் என தொவித்தார் என பழைய மாணவர் சுனில் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அர்ஜூன பாடசாலை அதிபரை சந்தித்து பிரவீன் குறித்து கேட்டறிந்தார்,என அதிபர் அருட்தந்தை கமிலியஸ் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த சிறுவன் விசேட திறமையுடையவன் அவன் ஒருநாள் இலங்கைக்காக விளையாடுவான் என்பதில் எனக்கு எந்த திறமையுமில்லை என அர்ஜூன தெரிவித்துள்ளார்.