மெக்சிகோவின் தலைநகரில் பிரதான ரயில்வே மேம்பாலம் ஒன்றுக்கு மேலாக ரயில் வண்டி சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அந்த பாலம் இடிந்து விழுந்ததால் கீழ வீதியில் இருந்த 15 பேர் மரணம் அடைந்தனர்.
இந்த ரயில் வண்டி பாலத்திற்கு மேலாக சென்றுகொண்டிருந்தபோது திடீரென அந்த பாலம் இடிந்து விழுந்து. கீழே சுறுசுறுப்பான வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் பல இதில் சிக்கி கொண்டன.
இதனால் 15 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பல ரயில் பெட்டிகள் பாலத்திற்கு கீழாக வீதியில் விழுந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியாளர்களும் தீயணைப்பு படையினரும் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து
இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.