ரஷ்யாவில் இருந்து சுமார் 6 லட்சம் ஸ்புட்னிக் தடுப்பு மருந்துகள்!

Date:

ரஷ்யாவில் இருந்து சுமார் 6 இலட்சம் ஸ்புட்னிக் தடுப்பு மருந்துகள் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும் என்று இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னானடோபுள்ளே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 4 ஆம் திகதி 15 ஆயிரம் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கிடைத்துள்ளன. இந்த தடுப்பூசி தொகுதிகள் கழற்றப்பட்டதும் இரண்டு மணி நேரங்களுக்குள் உரியவர்களுக்குச் செலுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இதுவரை 11 ஆயிரத்து 334 பேருக்கு இந்தத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் கொழும்பு, கொத்தெட்டுவ, மற்றும் கொலன்னாவ மருத்துவ அதிகார பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...