போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்களுடைய கும்பலுக்காக சிறுவர்களை கடத்தி வருகின்ற நடவடிக்கை சம்பந்தமாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் படி அந்த கும்பலுக்கெதிராக துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்கள்.இந்த மோதலில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜாகரெசின்ஹோ பகுதியில் உள்ள பாவேலாவில் நடந்த காவல்துறையினரின் தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த கும்பல் போதைப்பொருள் கடத்தல், மோசடி, கொலைகள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினர் பாவேலாவுக்குள் நுழைந்த போது சந்தேக நபர்கள் தப்பிக்க முயன்ற காட்சிகள் சீ.சீ டீவி காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரியோடி ஜெனிரோ பிரேசிலின் மிகவும் வன்முறை மாநிலங்களில் ஒன்றாகவும் , அதிகமாக கடத்தல் கும்பல்கள் இருக்கின்ற பிரதேசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.bbc.co.uk/news/world-latin-america-57013206