றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்பாட்டம்!!

Date:

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரரை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா புதியசாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்…
றிசாட் பதியூதீனை அதிகாலையில் சென்று கைதுசெய்யப்பட்டதையிட்டு வேதனையடைகின்றோம்..
அவரது கைதுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவிக்கின்றோம். அரசாங்கம் தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக இவ்வாறான கைதுகளை முன்னெடுத்துவருகின்றது.
அவர் அமைச்சராகவிருந்து பல்வேறு அபிவிருத்திகளை வன்னிமாவட்டத்திலே முன்னெடுத்தவர். எனவே அவர் விடுதலை செய்யப்படவேண்டும். நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும். என்றனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரைத்திருப்திப்படுத்த இந்த கைது,சர்வதேசஉறவுகளே அவரின் விடுதலைக்காய்குரல்கொடு,சிறுபாண்மைதலைமைகளை விடுதலைசெய், போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
வவுனியா நிருபர்

Popular

More like this
Related

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...