கொவிட் தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள நிலப் பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து சுகாதார அமைச்சுக்கு எழுதப்பட்டிருக்கின்றது.
முன்னதாக, இலங்கையில் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய ஒட்டமாவாடி பகுதியிலும், சமீபத்தில் திருகோணமலையில் உள்ள கிண்ணியா பகுதியிலும் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.