விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை இலங்கையர்கள் இன்று பார்வையிடலாம்!

Date:

விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று இலங்கையர்கள் பார்வையிட முடியும்.

அதன்படிமேகங்கள் அல்லாத தெளிவான வான் பரப்பில் இன்றிரவு 7.08 மணி தொடக்கம் 07.14 மணிவரையான காலப் பகுதியில் இலங்கையர்கள் வெற்றுக் கண்களால் இதனை பார்வையிட முடியும்.

பூமியிலிருந்து 400 க்கும் மேற்பட்ட கிலோ மீற்றர் தொலைவில் மிதந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் தென் – கிழக்கு திசையிலிருந்து வட – கிழக்கு திசையை நோக்கி பயணிக்கும்.

அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தை நிறுவியுள்ளன. இந்த நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வில் ஈடுபடுவது வழக்கம்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...