இன்று 28 கல்கிசை காவல்நிலையத்தில் சரணடைந்தார் மொரட்டுவ நகரசபை தவிசாளர் சமன் லால் பெர்னாண்டோ.
தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டமொன்றின்போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
மேலும், இன்றைய தினம் அவர் கல்கிசை காவல்நிலையத்தில் சரணடைந்ததையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.