10 நாட்களில் 10,000 கட்டில்களை வழங்கும் வேலைத் திட்டம்!

Date:

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்களை வழங்குவதற்கான ஒரு துரித வேலைத்திட்டம் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொவிட் நோயாளர்களுக்கான இந்த கட்டில்களை தயாரிப்பதற்கு நாட்டின் பல நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அம்பாறை மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் தொழில் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த இளம் பெண்களும் இந்த கட்டில்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அந்த இடத்தை பார்வையிட்டார். இந்த மாவட்டத்தில் 4 இடங்களில் கட்டில்கள் தயாரிக்கப்படுவதுடன், கொவிட் நோயாளர்களுக்காக 200 கட்டில்களை தயாரித்து வழங்கவுள்ளனர்.

இதேவேளை, அம்பாறை ஹார்டி உயர்கல்வி நிறுவனத்தில் நடாத்தி வரும் கொவிட் 19 மகளிர் விடுதியின் செயல்பாடுகளையும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

சுற்றாடல் பிரச்சினைகளை முறையிடுவதற்கு புதிய WhatsApp இலக்கம்

சுற்றாடல் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...