8 மாவட்டங்களின் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!

Date:

8 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் சிலப் பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய கம்பஹா மாவட்டத்தின் மஹபாகே காவல்துறை அதிகாரப்பிரிவுக்குபட்ட மகுல் பொகுன கிராம சேவகர் பிரிவும் வத்தளை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்தை தெற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் மீகஹாதன்ன காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட வலல்லாவிட்ட தெற்கு, மாகலந்துவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தின் புளத்கோபிட்டிய காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட உடபொத்த மற்றும் கென்தாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் கொஸ்வத்த காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட மத்திய கிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவும் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டி காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நவமெதகம கிராம சேவகர் பிரிவின் நவமெதகம பகுதியும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவளை கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட கெஸ்பேவ தெற்கு, மாகன்தன கிழக்கு, தம்பே, பட்டகெத்தர வடக்கு, மடபாத்த, ஹல்பிட்ட, கெஸ்பேவ கிழக்கு, மாகன்தன மேற்கு, நிவுன்கம, பொல்ஹேன, ஹென்னந்தர தெற்கு மற்றும் வடக்கு, தல்தர கிழக்கு மற்றும் மேற்கு நிவந்திடிய, மாம்பே மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும் கொழும்பு மாவட்டத்தின் மகரகமை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட அரவல்ல மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...