ஆகக் குறைந்த பணியாளர்களுடன் அரச அலுவலகங்கள் இன்று முதல் இயங்கும்.
ஆகக் குறைந்த மற்றும் அத்தியவசிய பணியாளர்களுடன் அரச அலுவலகங்கள் இன்று முதல் இயங்கும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அரச நிறுவனங்களுக்கு பணியாளர்களை அழைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் குறித்து கடந்த வாரம் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன் படி அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தல் நடைபெறும் என அமைச்சு அறிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையில் பயணிப்போர் திணைக்கள மற்றும் நிறுவனத் தலைவர் அல்லது உயர் அதிகாரி வழங்கும் கடிதத்தை காண்பித்து பயணிக்க முடியும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அல்லது அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பயணம் செய்ய முடியும் எனவும் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி தெரிவித்துள்ளார்.