ஆப்கானிஸ்தானின் தென் பகுதி மாநிலமான ஸாபுள் மாநிலத்தில் நேற்று இரவு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 க்கும் அதிகமானது என்றும் இதில் பெண்கள் சிறுவர்கள் ஆகியோரும் அடங்குவர் என்றும் காயமடைந்த
பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேற்றிரவு ஸாபுல் மாநிலத்தில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றை இலக்கு வைத்து வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது.
அண்மைக்காலத்தில் ஆப்கானிஸ்தானில் இவ்வாறான குண்டுத் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன எதிர்வரும் செப்டம்பர் மாதம் அளவில்
தன்னுடைய படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக் கொள்ளப் போவதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனிடையே இவ்வார பிற்பகுதியில் இடம்பெறவுள்ள நோன்புப் பெருநாளை முன்னிட்டு மூன்று நாள் யுத்த நிறுத்தத்தை அறிவிக்க உள்ளதாகவும் தலிபான் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
காணொளி 👇
https://www.aljazeera.com/news/2021/5/10/israeli-forces-raid-al-aqsa-compound-live