இந்தியாவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள B.1.617 கொரோணாவைரஸ் மாதிரி தற்போது இலங்கையில் ஒரு நோயாளியிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் சந்திம ஜீவன்தர சற்று முன்னர் உறுதி செய்துள்ளார்.
இந்த வைரஸ் மிகவும் கொடிய தாக்கங்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி ஆகக்கூடுதலான பரவல் வேகம் கொண்டது என்பது ஏற்கனவே அறிந்த விடயமாகும். இந்நிலையில் இந்தியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய ஒரு நபரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரியில் இந்த வைரஸ் இனம் காணப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது