நேற்று (25) ஆம் திகதி இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் 13 மில்லியன் ரூபா பெறுமதியான 4,700 பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இவை வழங்கப்பட்டுள்ளன.
பசுபிக் ஒக்மெண்டேஷன் குழுவின் பணிப்பாளர் பிரட் லீடர் மற்றும் சிவில் ராணுவ துணை பிரிவின் பணிப்பாளர் டோனி ஷூ ஆகியோர் இந்த பிசிஆர் கருவிகளை இராஜாங்க அமைச்சர்களான சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோரிடம் வழங்கினார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)