இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறையில் பங்களாதேஷ் அணி 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.இந் நிலையில் 2-0 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் முதலில் பங்களாதேஷ் அணி 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களைப் பெற்று 247 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.அதனடிப்படையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கையின் ஆட்டத்திற்கு மழை குறுக்கிட்டது.இதன் பிறகு டக்வேர்த் லூயிஸ் முறையில் 40 ஓவர்களில் 245 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் 40 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.இதனடிப்படையில் டக்வேர்த் லூயிஸ் முறையில் 103 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ் அணி இலங்கைக்கு எதிரான தொடரை முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.
இப் போட்டியின் ஆட்ட நாயகனாக முஷ்பிகுர் ரஹீம் (125 ஓட்டங்கள்) தெரிவு செய்யப்பட்டார்.