பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவுக்கும் இடையிலான 11 நாள் மோதலை முடிவுக்குக் கொண்டுவருதற்கான யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் குறைந்தது 230 பாலஸ்தீனியர்களும் 12 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் அமைச்சரவை உடனடியாகவும் நிபந்தனைகளற்றதுமான மோதல் தவிர்ப்பை அமல்படுத்துவதற்கு நேற்று தீர்மானித்தது.
அதேபோன்று ஹமாசின் அமைச்சரவையும் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு தரப்புக்கும் இடையில் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி முதல் தீவிர மோதல்கள் இடம்பெற்று வந்தன.
காசாவில் மரணித்தவர்களில் அதிகப்படியானவர்கள் சிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.