இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட காஸா பிரதேசத்தில் இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் தரைவழி தாக்குதல் மற்றும் மூர்க்கத்தனமான வான் தாக்குதல்கள் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 43 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனர்களுடனான முழு அளவிலான யுத்தத்துக்கு தாங்கள் தயாராக இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெறுகின்ற மிக மோசமான மிகத்தீவிரமான தாக்குதல் இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .
இதனிடையே முதல்தடவையாக பலஸ்தீன பிரதேசத்திலிருந்து ஹமாஸ் தலைமையிலான போராட்டக்குழுவினர்
கடுமையான பதில் தாக்குதலை தொடுத்துள்ளனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. ஆனால் அது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதையும் வெளியிடாமல் இஸ்ரேல் பாதுகாத்து வருகின்றது. இருப்பினும் இதுவரை 5 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
கஸா பிரதேசத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து உலகளாவிய மட்டத்தில்
எதிர்ப்புகளும் கிளம்பத் தொடங்கி இருக்கின்றன.










ஆகிய பல இடங்களில் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டங்களில் பாரிய அளவிலான மக்கள் தற்போதைய சுகாதார விதிமுறைகளை மீறி வீதிகளில் இறங்கி ஆயிரக்கணக்கானோர் திரண்டு தமது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இஸ்ரேலுக்கு எதிராக உலகளாவிய மட்டத்தில் ஒரே நேரத்தில் மிகத்தீவிரமான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்ற மையும் இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கதாகும் .