திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபால் அப்பகுதியில் கொவிட் பணிகளில் ஈடுபடும் மூன்று நிறுவனங்களுக்கு அவரின் சொந்த நிதி 175000.00 ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதன்படி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிண்ணியா கிளையின் அனர்த்த நிதியத்துக்கு 75000.00 உம் AL-MABARRA CHARITY FUND ORGANIZATION க்கு 50000.00 உம் இன்று காலை வழங்கப்பட்ட்து
இது தவிர திருகோணமலை வைத்தியசாலையின் ஜனாஸா தொடர்பான நலன்புரி அமைப்பொன்றுக்கு 50000.00 உம் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ,
இந்நிதியுதவி தவிர கொவிட் மற்றும் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான பௌதீக ,பொருளாதார உதவிகளை செய்துவருகிறோம். மேலதிக உதவிகளை பெற தேவையான முயற்சிகளும் நடைபெறுகின்றன.அவை வெற்றிபெற இறைவனை பிராத்திக்கிறேன். உங்களால் முடிந்த உதவிகளை நீங்களும் வழங்குங்கள் என தெரிவித்தார்.