சாதனை படைத்த அங்குநொச்சிய, அல்மாஸ் மகா வித்தியாலயம்

Date:

2020 க.பொ.த. உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் ஹொரவ்பொத்தான, அங்குநொச்சிய அல்மாஸ் மஹா வித்தியாலயத்தின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது.
33 மாணவர்கள் கலை துறையில் பரீட்சைக்கு தோற்றி 25 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதோடு அதில் 11 மாணவர்கள் பல்கலைக்கழகம் பெற தகுதி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.ஜ.எம் தௌபீக் தெரிவித்தார்.
இம்முறை அதிகூடிய மாணவர்கள் பல்கலைக்கழகம் பெற தகுதிபெற்றுள்ளமை பாடசாலையின் வரலாற்று சாதனையாக பதிவாகுவதாக பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் கொவிட்19 அசாதாரண சூழ்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் தியாகம் பெரிதும் பாராட்டப்படவேண்டியது எனவும் இதற்காக பாடுபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பாடசாலையின் அதிபர் ஏ.ஜ.எம் தௌபீக் தெரிவித்தார்.
முஹம்மட் ஹாசில்

Popular

More like this
Related

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...