60 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

Date:

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணையத் தொடர்புக்கான 60 செயற்கைகோள்களை பால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் செலுத்தப்பட்டதை அடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பிய செயற்கைகோள் பகுதிகளின் மொத்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. சுற்றுப்பாதையில் செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டதை அடுத்து ராக்கெட்டின் பூஸ்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

தரையிறக்கப்பட்ட பால்கன் 9 பூஸ்டரை கொண்டு மறுசுழற்சி முறையில் இதற்கு முன் 8 முறை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட்டை ஏவி இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் சீரான இணையதள வசதியை ஏற்படுத்த செயற்கை கோள்களை ஏவி வரும் ஸ்பேஸ் எக்ஸ்சின் ஸ்டார்லிங் நிறுவனம் இதுவரை ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை ஏவி உள்ளது.

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...