சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசா தொடர்பான வழக்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு நெருக்கமாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாகவும், கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துடன் ஒருங்கிணைந்தும் வழக்கின் முன்னேற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சம்பந்தப்பட்ட சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், அனோஜன் சிவராசாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், அவருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
