ஜூன் மாத இறுதிவரை பயணத்தடையை முன்னெடுப்பதற்கு அரச மேல்மட்டத்தில் ஆராய்வு..!

Date:

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை ஜூன் மாத இறுதிவரை முன்னெடுப்பதற்கு அரச மேல்மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.

இந்த பயணக்கட்டுப்பாடு ஜூன் 7 ஆம் திகதிவரை நீடிப்பதாக நேற்று முன்தினம் அரசு அறிவித்தபோதும் அதனையும் தாண்டி பயணத்தடை தொடரும் வாய்ப்பு இருப்பதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதால், இதனை தொடர்ந்து சில வாரங்களுக்கு நீடிக்க அரசு விரும்புவதாக சொல்லப்பட்டது.

நடமாடும் வியாபாரிகளின் சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வீடுகளின் அருகே வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. குறைந்த வருமானமுடைய மக்களுக்கு ஐயாயிரம் ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

இதர அவசர சேவைகள் இயங்கும். அதனடிப்படையில் பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க அரசு ஆலோசிக்கிறது.

அரச மற்றும் வங்கிகளின் சேவைகளை குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு இயங்கவைக்கவும் ஆலோசிக்கப்படுகிறது என அரசின் முக்கிய பிரமுகரொருவர் நேற்றிரவு தமிழன் செய்திகளிடம் தெரிவித்தார்.

அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளை மறு அறிவித்தல்வரை மூடவும் அரசு தீர்மானித்துள்ளது.

பயணக்கட்டுப்பாடு குறித்தான அரசின் புதிய அறிவிப்பு ஜூன் 5 அல்லது 6 ஆம் திகதிகளில் வெளிவருமென மேலும் சொல்லப்பட்டது.

 

நன்றி : தமிழன்

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...