நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான கடுனாவில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் அந்த நாட்டு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் இப்ராஹிம் அட்டாஹிரு உயிரிழந்துள்ளார்.
அதேவேளை அவருடன் பயணித்த உதவியாளர்கள் சிலரும் விபத்தில் மரணித்ததாக அந்த நாட்டு வான்படை அறிவித்துள்ளது.எவ்வாறாயினும் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.அத்துடன் விபத்து நேர்ந்தமைக்கான காரணமும் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் நைஜீரியா வான்படை அறிவித்துள்ளது.
54வயதான இவர் கடந்த ஜனவரி மாதம் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.நைஜீரியாவில் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களின் செயற்பாடுகள் அதிகரித்த நிலையில் இப்ராஹிம் அட்டாஹிரு இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.