பல பேரின் உயிரை காப்பாற்றிய நடிகர் சோனு சூட் & குழுவினர்!

Date:

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து ஒக்சிசன் இல்லாமல் நோயாளிகள் உயிருக்கு போராடி வருகின்றனர் என்ற அபயக் குரல் கேட்டு பாலிவுட் நடிகர் சோனு சூட்துரிதமாக செயல்பட்டு இரவு முழுவதும் போராடி, அலைந்து அம்மருத்துவமனைக்கு ஒக்சிசன் சிலிண்டர்கள் ஏற்பாடு செய்ததன் பயனாக அம்மருத்துவமனையில் 22 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவில் பெங்களூருவில் உள்ள ARAK மருத்துவமனையில் ஒக்சிசன் தட்டுப்பாடு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாகவும் மேலும் 22 பேர் ஒக்சிசன் கிடைக்காமல் உயிருக்கு போராடி வருவதாகவும் எலஹங்கா சரக காவல் ஆய்வாளர் சத்யநாராயணன், தனக்கு தெரிந்த நடிகர் சோனு சூட்டின் அறக்கட்டளை உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த சோனு சூட்டின் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களும், நடிகர் சோனு சூட்டும் உடனடியாக செயலில் இறங்கினர். தங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவரிடமும் தொடர்பு கொண்டு ஆக்ஸிஜன் கேட்டுள்ளனர். இதனடிப்படையில் அன்று நள்ளிரவு ஒரு ஒக்சிசன் சிலிண்டர் ஏற்பாடு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மேலும் 15 ஒக்சிசன் சிலிண்டர்களை சோனு சூட்டின் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்து அம்மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக நடிகர் சோனு சூட் தெரிவித்ததாவது, “இது முற்றிலும் ஒரு கூட்டு முயற்சி. நம் சக மனிதர்களும் உதவியுள்ளனர். காவல் ஆய்வாளர் சத்யநாராயணணிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தவுடன் உடனடியாக அந்த தகவலை சரிபார்த்துவிட்டு நாங்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே களத்தில் இறங்கினோம். அந்த இரவு எதைப்பற்றியும் சிந்திக்காமல் எங்கள் குழுவினர் அம்மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தனர். சிறிதளவு தாமதம் ஏற்பட்டிருந்தாலும் பல குடும்பத்தினர் தங்களின் அன்பானவர்களை இழந்திருக்கக்கூடும்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...