பிரதான மாகாணங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

Date:

நாட்டின் தென்மேற்கு பகுதியில் (மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில்) தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்று நிலைமையும் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை,கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு அந்தமான் கடற்பரப்புகளுக்கும் அண்மையாகவுள்ள கிழக்கு – மத்தியவங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கும் மேலாக 2021 மே 22 ஆம் திகதி அளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம்உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது மே 23 ஆம் திகதி அளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது மேலும் வலுவடைந்து மே 24 ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து மே 26 ஆம் திகதி காலை அளவில் மேற்கு வங்காள கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Popular

More like this
Related

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...