புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட முஸ்லிம் பாராளுமன்ற  உறுப்பினர் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பு!

Date:

அகில இலங்கை மக்கள் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி எஸ்.எம் ரஹீம், கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்துள்ளார்.

இவர் கடந்த 20ஆவது திருத்தத்திற்கான வாக்கெடுப்பிலும் ஆதரவாகவே வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை போர்ட் சிட்டி ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பில் ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...