மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்!  

Date:

கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களில், பொலிஸ் பிரிவு ஒன்று உட்பட 7 கிராம சேவகர் பிரிவுகளும் இன்று (02) காலை 6 மணியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின், பிலியந்தலை பொலிஸ் பிரிவும், களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின், வலான வடக்கு, வேகட வடக்கு, கிரிபேரிய மற்றும் மாலமுல்ல கிழக்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின், திருகோணமலை பொலிஸ் பிரிவின், உவர்மலை கிராம சேவகர் பிரிவு, உப்புவெளி பொலிஸ் பிரிவின், அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின், வலப்பனை பொலிஸ் பிரிவின், நீலந்தந்தஹின்ன கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...