அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்

Date:

ஐக்கிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் ,முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மேலும், தன்னை விடுதலை செய்யுமாறு கோரி அசாத் சாலி தாக்கல் செய்த மனு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி சொலிஸிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். குறித்த வழக்கு இன்று (28) பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட மற்றும் ஏ.எச்.எம்.டீ நவாஸ் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும்,  குறித்த மனு மீதான விசாரணை ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...