அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலை குறைப்பு-விசேட கலந்துரையாடல்!

Date:

பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை நாளை 10ஆம் திகதி முதல் குறைத்து அந்த விலைகளை ஒரு வருடத்துக்கு நிலையானதாக வைத்திருக்க உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டை உப்பு உற்பத்தி நிலையத்தைப் பார்வையிட்ட பின் அமைச்சர் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அண்மைய நாட்களில் பெரும் உப்பு பற்றாக்குறையை நாட்டில் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதுடன் ஒரு கிலோ உப்பின் விலையை 100 ஆக அதிகரிக்கும் முயற்சியும் இடம்பெறுகிறது. நாட்டுக்குத் தேவையான அளவு உப்பு எம்மிடம் உள்ளது. அரசாங்கம் தவிர தனியார் துறையினராலும் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இலங்கை இப்போது உப்பை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாறியுள்ளது என்றார்.

Popular

More like this
Related

டொலரின் ஆதிக்கம் முடியப்போகிறதா? ஹார்முஸ் நீரிணையும் உலக அரசியலும்.

-Dr.Ashker Aroos (Naleemi) ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) அமெரிக்காவின் அதிகாரத்திற்கு...

எரிபொருள் QR கட்டமைப்பின் செயல்திறன் மேம்பாடு

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு செயன்முறையை மேம்படுத்தி அதன் செயல்திறனை மேம்படுத்துவது...

ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் படம்பிடிப்பது தொடர்பில் சவூதிக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்...