இன்றும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு

Date:

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நொரகல்ல கிராம சேவகர் பிரிவின் நொரகல்ல மேல் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், யக்தெஹிவத்த கிராம சேவகர் பிரிவின் பின்கந்த 1 மற்றும் பின்கந்த 2 ஆகிய பகுதிகளும் பாதகட கிராம் சேவகர் பிரிவின் பின்கந்த 3 பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மொனராகலை மாவட்டத்தின் ஹிதிகிவுல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நக்கலவத்த கிராமம் மற்றும் மில்லகெலே வத்த கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...