இலங்கையில் இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் முழு விபரம்!

Date:

நாட்டில் இதுவரை 2,430,811 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

 

இதற்கமைய, நேற்றைய தினத்தில் (18) மாத்திரம் 22,419 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

 

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 34,476 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

இதேவேளை, நேற்றைய தினம் 1,258 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

 

இதற்கமைய, இதுவரை 357,868 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, இதுவரை 81,695 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...