கடன் விடயத்தில் மக்கள் படும் சிரமங்களை எவ்வாறு குறைப்பது- நிதி துறையினருடன் பிரதமர் கலந்தாலோசனை!

Date:

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களின் கடன்களை மீளப்பெறும் போது,

அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று அலரி மாளிகையில் நடந்த சந்திப்பில் மத்திய வங்கி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பில் மத்திய வங்கி பிரதிநிதிகள் கௌரவ பிரதமருக்கு இதன் போது விளக்கமளித்தனர்.

இவ்வாறான தொற்று நிலைமைக்கு மத்தியில் நிதிக் கடன்களை பெற்றுக்கொண்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரத்தியேக கவனம் செலுத்தி ஆலோசித்தார்.

எனவே, கடன்களை மீளப்பெறும் போது, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு அவற்றைப் பெற்றுக்கொண்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு ஏற்ற வழிமுறைகளை உருவாக்கி, அந்த வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கௌரவ பிரதமர் அவர்கள் இது தொடர்பான அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தவணை கட்டணங்களை செலுத்தும் போது வட்டி தொகையை முதலில் செலுத்த வேண்டியிருப்பதால் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு கடனாளிகள் தள்ளப்பட்டுள்ளதுடன்,
வட்டி மற்றும் கடன் தொகையைச் செலுத்துவதற்கான முறையில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பிலும் இதன்போது கௌரவ பிரதமர் அவர்கள் மத்திய வங்கி அதிகாரிகளுடன் ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி சந்திப்பில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டீ. லக்ஷ்மன், மத்திய வங்கியின் துணை ஆளுநர்களான கே. எம். எம். சிறிவர்தன, எம். டபிள்யூ. ஜீ. ஆர். டீ. நாணாயக்கார, மத்திய வங்கியின் உதவி ஆளுநர்களான ஜே. பீ. ஆர். கருணாரத்ன, ஏ. ஏ. எம். தாஸீம், பொருளாதார மற்றும் ஆராய்ச்சி பணிப்பாளர் சீ. அமரசேகர, வங்கி அல்லாத நிதி நிறுவன ஆராய்ச்சி பணிப்பாளர் சமன் நாணாயக்கார உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...