சேதனப் பசளை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அசேதனப் பசளை இறக்குமதிக்குப் பதிலாக சேதனப் பசளைகளை இறக்குமதி செய்ய கடந்த வாரங்களில் தீர்மானிக்கப்பட்டிருந்த்து.
சீனாவிலிருந்து நகர்ப்புற் கழிவுகளை இறக்குமதி செய்ய முயற்சிக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல தரப்புக்கள் குற்றம் சாட்டியிருந்தன.
இந்நிலையில் இறக்குமதித் தீர்மானம் மீள பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.