கொரோனா தொற்று குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!

Date:

நாட்டில் மேலும் 2,142 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை 215,538 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,811 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 182,238 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக்...

சுயதொழில் உபகரணங்கள் மற்றும் கல்வி நிதியுதவி வழங்கி வைப்பு: பஹன மீடியாவின் மற்றுமோர் மனிதாபிமானப் பணி

இலங்கையில் ஊடகப்பணியைத் தாண்டி, சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் பஹன மீடியா நிறுவனம்...

கடும் வெப்பமான வானிலை அடுத்த மாதம் வரை நீடிக்கும்.

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம்...

MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு...