சுயதொழில் உபகரணங்கள் மற்றும் கல்வி நிதியுதவி வழங்கி வைப்பு: பஹன மீடியாவின் மற்றுமோர் மனிதாபிமானப் பணி

Date:

இலங்கையில் ஊடகப்பணியைத் தாண்டி, சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் பஹன மீடியா நிறுவனம் தடம் பதித்து வருகிறது.

அந்த வகையில், அண்மையில் நாட்டைத் தாக்கிய ‘டிட்வா’  புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முன்னின்று உழைத்த பஹன மீடியா, தற்போது வாழ்வாதார மற்றும் கல்வி உதவிகளையும் வழங்கியுள்ளது.

கடந்த 17-ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, வெலிமடை பிரதேசத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்கான விசேட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்குச் சுயதொழில் செய்வதற்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, உயர்கல்வியைத் தொடர நிதி வசதி இல்லாத மாணவர்களுக்குக் கல்விக்கான நிதியுதவிகளும் இதன்போது கையளிக்கப்பட்டன.

இந்த மனிதாபிமானப் பணியினை Integrated Development Initiative அமைப்பு, பஹன மீடியாவுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்விற்கான முழுமையான நிதி அனுசரணையைக் கொடையாளர் பஸ்ஸாம் அல்பந்தரி அவர்கள் வழங்கியிருந்தார்.

அரசியல் மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து, கஷ்டப்படும் மக்களுக்கு நேரடியாக உதவும் பஹன மீடியாவின் இத்தகைய சமூகப் பங்களிப்பு குறித்து அப்பகுதி மக்கள் பெரும் நெகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...