கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 28 சதவீதத்தால் அதிகரிப்பு!

Date:

பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதா, இல்லையா என்பது பற்றிய தீர்மானம் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் தீர்மானிக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

நேற்றைய தினம் (09) கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும், கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு காணப்படுவதுடன், கொவிட் மரணங்களும் 28 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னர் வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், அது 14 நாட்களுக்குள் பரவியிருக்கலாம் என்றும், இந்த தொற்றாளர்கள் தற்போதுதான் பதிவாகி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், இந்தத் தொற்றாளர்கள் இதற்குப் பிறகும் பதிவாகலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...