கொவிட் 19 தொற்று நிலைமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கு சலுகைகள்

Date:

கொவிட் 19 தொற்று நிலைமையால் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் துறைகளில் ஒரு சில நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணிக் கொண்டு செல்வதற்காக சலுகைகள் வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய அனைத்து ஊழியர்களுக்கும் பணி புரிவதற்காக சமமான வாய்ப்புக்களை வழங்கல், ஊழியர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டுமாயின், இறுதியாக செலுத்தப்பட்ட மொத்த மாதாந்தச் சம்பளத்தின் 50 வீதம் அல்லது 14,500/= தொகையில் அதிக நன்மை கிட்டும் தொகையை வழங்கல் வேண்டும்

மேலும், குறித்த சம்பளத்திற்காக தொழில் வழங்குனரால் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்குப் பணம் செலுத்தல், உலகளாவிய ரீதியில் சர்வதேச விமானப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், குறிப்பாக எமது நாட்டில் சுற்றுலாத் துறையை வழக்கமான வகையில் பேணிச்செல்ல இயலாமையால், குறித்த துறையில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

இச் சலுகைகளை 2021 ஜூலை மாதம் தொடக்கம் 2021 டிசம்பர் மாதம் இறுதிவரைக்கும் நடைமுறைப்படுத்தும் வகையில் தொழில் உறவுகள் அமைச்சர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...