கடந்த தினம் கொழும்பு 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட மேலும் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 5 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பிறந்தநாள் நிகழ்வை ஏற்பாடு செய்தமை தொடர்பில் அழகு கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியுமி ஹங்சமாலி ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் இருவரும் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணை விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.