சிறுவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Date:

தற்போதைய பயணத் தடையை அடுத்து சிறுவர்களை வீடுகளுக்கு உள்ளேயே தங்க வைப்பது சிறந்தது எனவும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்களுக்கு அருகில் அவர்களை அழைத்து செல்ல வேண்டாம் எனவும் பொரளை ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மரக்கறி, பழ வகைகள், உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வாகனங்கள் வீட்டிற்கு அருகில் வருகை தரும் போது, அந்த வாகனங்களுக்கு அருகில் சிறுவர்கள் செல்வது வழக்கம் என அவர் குறிப்பிட்டார்.

 

இவ்வாறு வருகை தரும் வாகனங்களுக்கு அருகில், சிறுவர்கள் செல்வதற்கு இடமளிக்க வேண்டாம் என கூறிய அவர், குறித்த வாகனங்களுக்கு அருகில் வீட்டிலுள்ள பெரியவர்களை மாத்திரம் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

பொருட்களை கொள்வனவு செய்ததன் பின்னர், உடனடியாக வீட்டிற்குள் அவற்றை கொண்டு செல்ல வேண்டாம் எனவும், வீட்டிற்கு வெளியிலேயே வைத்து, அவற்றை கழுவி வீட்டிற்குள் கொண்டு செல்லுமாறும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

 

இதேவேளை, 2 வயது முதல் 15 வயது வரையான அனைத்து சிறுவர்களுக்கும் கட்டாயம் முகக் கவசத்தை அணிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...