சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது!

Date:

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது.

இதன்படி 8 மாவட்டங்களை சேர்ந்த 219,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி முதலான மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக, 10 பேர் மரணித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

11 வீடுகள் முழுமையாகவும், 724 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

சீரற்ற வானிலையால் 3,528 குடும்பங்களை சேர்ந்த 15,499 பேர், 69 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

612 குடும்பங்களை சேர்ந்த 2,471 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

மே 9 கலவரம்: இம்ரான் கானுக்கு பிணை வழங்கிய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்...

அமைச்சரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: இன்றும் தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ்...

மேல் மாகாணத்தில் 5 பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிப்பு!

இலங்கையின் மேல் மாகாணத்தில் நீரிழிவு நோயால் ஐந்து பேரில் ஒருவர் பாதிக்கப்படுவதாக...

எதிர்வரும் நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் மாலையில் மழை

எதிர்வரும் நாட்களில் நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில்...