தனது நிலைப்பாட்டை மாற்ற முடியாது என்கிறார் சாகர காரியவசம்!

Date:

இந்நாட்டு எரிபொருள் விலை அதிகரிப்பு தீர்மானம் தொடர்பில் தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (16) கட்சி அலுவலகத்திற்கு வந்த போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.

 

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் தனது கையெழுத்துடன் வௌியிடப்பட்ட கடிதத்தின் நிலைப்பாட்டில் தான் மற்றும் கட்சி தொடர்ந்தும் உள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

 

“இரகசிய கலந்துரையாடல்கள் இல்லை. நாம் அனைத்தையும் வௌிப்படையாக செய்கிறோம். இந்நாட்டு மக்களால் உருவாக்கப்பட்ட கட்சிதான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன. நாம் மக்களுக்காக எடுக்க வேண்டிய அனைத்து தீர்மானங்களையும் எடுப்போம். தைரியமாக அறிவிப்போம். எதிர்காலத்திலும் அப்படிதான். வௌியிடப்பட்ட கடிதத்தின் நிலைப்பாட்டில் இன்றும் நான் இருக்கிறேன். கட்சியும் அப்படிதான்.”

Popular

More like this
Related

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...