நாட்டில் டெங்கு நோயாளர்களது எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்

Date:

அடுத்த வாரமளவில் டெங்கு நோயாளர்களது எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்திய அனுர ஜெயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் பல இடங்களில் மழை மற்றும் வெள்ள சூழ்நிலை நிலவுகின்ற காரணத்தால்  கொழும்பு மாவட்டம், அதிக அச்சுறுத்தல்மிக்க பகுதியாக காணப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கம்பஹா, களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவல் அபாயம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் டெங்கு நுளம்புகள் பரவுவதை தடுக்கும் வகையில் தங்களது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும் வைத்தியர் அனுர ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஹஜ் பயண முகவர் சங்கத்தின் தலைவராக அல்ஹாஜ் அம்ஜடீன் தெரிவு

2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவராக அம்ஜா...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்...