சிறுவர் துஷ்பிரயோகம்: நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவை.

Date:

குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் தற்போது 4,000-க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்த தண்டனைச் சட்டக்கோவையின் படி, நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,289 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில் 1,683 வழக்குகள் ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் தொடர்பான ஆபாச வெளியீடுகள், சிறுவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், பாலியல் தொழிலுக்காகச் சிறுவர்களை வாடகைக்கு எடுத்தல் அல்லது பணியில் அமர்த்துதல், சிறுவர்கள் மீதான கொடூரம், பாலியல் வல்லுறவு மற்றும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்கள் தொடர்பில் சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றங்களில் இந்த அதிவேகக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

மன்னிப்பு கேட்ட முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி அரச பத்திரிகை ஊடாக பொதுமன்னிப்பு அறிவித்தலை...

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம் – மழை நீடிக்கும் சாத்தியம்

வங்காள விரிகுடாவின் வட அந்தமான் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் குறைந்த...

அமெரிக்க செனட் வேட்பாளர் அப்துல் அல்-சயீத் தனக்கு வைக்கப்பட்ட ‘பொறியை’ சாதகமாக மாற்றிய தருணம்.

எதிர்பாராத ஒரு திருப்பமாக, மிச்சிகன் மாநிலத்தில் அமெரிக்க செனட் சபைக்கான(Senate) ஜனநாயகக்...

கொழும்பில் காசநோய் பரவ அதிக மக்கள் தொகையே முக்கிய காரணம்: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்!

கொழும்பு நகரில் பல வருடங்களாகக் காசநோய் பரவுவதற்கு அங்குள்ள அதிக மக்கள்...