ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்கு ஐக்கிய அரபு அமீரகம் முன்மொழிந்துள்ள வேட்பாளரான லானா நுஸைபே யார்?

Date:

ஐநா சபையின் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை இணை அமைச்சரும், ஐநாவுக்கான முன்னாள் நிரந்தரப் பிரதிநிதியுமான லானா நஸீபா (Lana Nusseibeh) அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், இவரின் நியமனம் சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

1978 ஆம் ஆண்டு பிறந்த லானா நஸீபா, பாலஸ்தீனத்தின் எருசலேம் (Jerusalem) நகரைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நஸீபா குடும்பத்தின் வழிவந்தவராவார்.

லானா நஸீபாவின் குடும்பம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெருசலேம் (Jerusalem) நகரைச் சேர்ந்தது. ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘திருச்சிலுவை தேவாலயத்தின்’ (Church of the Holy Sepulchre) சாவிகளைப் பாதுகாக்கும் முக்கியப் பொறுப்பை 7ஆம் நூற்றாண்டு முதல் நஸீபா குடும்பமே தலைமுறை தலைமுறையாக வகித்து வருகிறது.

இவரது தந்தை ஜாகி நஸீபா (Zaki Nusseibeh), ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யானின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றியவர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், லண்டன் பல்கலைக்கழகத்தின் SOAS கல்வி நிறுவனத்தில் இஸ்ரேலிய மற்றும் யூத புலம்பெயர்வு ஆய்வுகளில் (Israeli and Jewish Diaspora Studies) லானா முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

கடந்த 2013 முதல் 2024 வரை ஐநாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ள இவர், ஐநா பெண் அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

இஸ்ரேலுடனான ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவுகள் மற்றும் ஆபிரகாம் உடன்படிக்கைகளை (Abraham Accords) அவர் தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளார்.

அதேவேளையில், காஸா போரின் ஆரம்பக் கட்டத்தில் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான பாதுகாப்புப் பேரவைத் தீர்மானங்களை முன்னெடுத்ததுடன், பன்னாட்டு நீதிமன்றத்தில் (ICJ) பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்தும் வாதிட்டுள்ளார்.

பிராந்தியத்தில் இஸ்ரேலின் செல்வாக்கு மற்றும் ஊடுருவல்களுக்கு அமீரகத்தின் கொள்கைகள் வழிவகுத்ததாகவும், இது பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் அமைந்ததாகவும் விமர்சகர்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கான போட்டியில் அவர் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐநா பொதுச்செயலாளர் தேர்தல் சவால்கள்:

பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்வாக ஐநா பாதுகாப்புப் பேரவையின் 15 உறுப்பு நாடுகளில் குறைந்தது 9 நாடுகளின் ஆதரவு தேவை என்பதோடு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளின் ‘வீட்டோ’ (Veto) அதிகார எதிர்ப்பும் இருக்கக்கூடாது. அதன் பின்னரே ஐநா பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடைபெறும்.

இருப்பினும், ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கான பிராந்திய சுழற்சி முறையின்படி, இம்முறை லத்தீன் அமெரிக்கா அல்லது கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதால், லானா நஸீபா தனது தேர்வில் சில சவால்களைச் சந்திக்க நேரிடலாம் எனக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கொழும்பில் காசநோய் பரவ அதிக மக்கள் தொகையே முக்கிய காரணம்: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்!

கொழும்பு நகரில் பல வருடங்களாகக் காசநோய் பரவுவதற்கு அங்குள்ள அதிக மக்கள்...

சிறையில் உள்ள நாமலுக்கு உணர்வுபூர்வமாக கடிதம் எழுதிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிற்கு, முன்னாள்...

நிதி நெருக்கடி: காஸாவில் அரை மில்லியன் பாலஸ்தீனர்களுக்கான உணவு உதவிகளை நிறுத்தியது உலக உணவுத் திட்டம்

கடுமையான நிதிப் பற்றாக்குறை காரணமாக ஐநா சபையின் உலக உணவுத் திட்டம்...

அடுத்த மூன்று நாட்களுக்குள் 3.5 இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு!

அடுத்த மூன்று நாட்களுக்குள் 3 இலட்சத்து 50 ஆயிரம் லிட்ரோ எரிவாயு...