அடுத்த மூன்று நாட்களுக்குள் 3 இலட்சத்து 50 ஆயிரம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்த CORINTHIAN கப்பல் நேற்று (22) இலங்கையை வந்தடைந்ததாக நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 3 இலட்சத்து 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களையும் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எரிவாயுத் தொகை கிடைத்துள்ள நிலையில், நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும், நுகர்வோர் வழமைபோன்று எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, தேவையற்ற வகையில் எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்து சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும் நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
