510 மீத்தோட்டுமுல்ல மக்கள் பாதுகாப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச மருத்துவ முகாம் நாளை, 2026 ஒக்டோபர் 24 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
கொலன்னாவையில் உள்ள இலக்கம் 72, டயமன் கெயா பவுண்டேஷன் வளாகத்தில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இந்த முகாம் இடம்பெறவுள்ளது.
இம்முகாமில் பங்குபற்றுபவர்களுக்குப் பொது வைத்திய பரிசோதனை, இரத்தச் சர்க்கரை அளவு பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் இலவச வாசிப்பு கண்ணாடி வழங்குதல் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.
மேலும், பெண்கள் சுகாதார சேவைகள், இரத்த அழுத்தப் பரிசோதனை, உயரம், எடை மற்றும் உடல் நிறை குறியீடு (BMI) அளவிடுதல், பல் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆயுர்வேத மருத்துவ சேவைகள் உள்ளிட்ட பல்வேறு இலவச மருத்துவ ஆலோசனைகளும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
