நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் − மாவட்ட ரீதியான தகவல் 

Date:

நேற்று (31) நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான 2,912 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையில், கொழும்பு மாவட்டத்தில் 490 பேருக்கு தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹாவில் 322 பேருக்கும், களுத்துறையில் 260 பேருக்கும், கண்டியில் 261 பேருக்கும், குருநாகலில் 145 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 149 பேருக்கும், காலியில் 94 பேருக்கும், கேகாலையில் 36 பேருக்கும், புத்தளத்தில் 91 பேருக்கும், அநுராதபுரத்தில் 124 பேருக்கும், மாத்தறையில் 33 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

பொலனறுவையில் 57 பேருக்கும்,  அம்பாறையில் 50 பேருக்கும், நுவரெலியாவில் 13 பேருக்கும், இரத்தினபுரியில் 98 பேருக்கும்,  ஹம்பாந்தோட்டையில் 102 பேருக்கும், பதுளையில் 65 பேருக்கும், மட்டக்களப்பில் 150 பேருக்கும், மொனராகலையில் 7 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

கிளிநொச்சியில் 27 பேரும், முல்லைத்தீவில் 9 பேரும், திருகோணமலையில் 111 பேரும், மாத்தளையில் 126 பேரும், வவுனியாவில் 16 பேரும், மன்னாரில் 46 பேரும் நேற்று அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...