பகிடிவதை சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் தொடர்பில் கருத்தரங்கு!

Date:

பகிடிவதை சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்துவதற்கு கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாளி வளாகம் தீர்மானித்துள்ளது.

இதன் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை சூம் (ZOOM) தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெறும் என பேராசிரியர் பிரதீபா மகாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களை 077 359 62 28 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்த பேராசிரியர் பல்கலைக்கழகங்களில் இருந்து பகிடிவதையை ஒழிப்பதற்கான கூட்டு வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

பகிடிவதை சட்டமூலத்தை காலத்திற்கு ஏற்றவாறு திருத்த வேண்டியதன் அவசியமும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச பொறிமுறை முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென பேராசிரியர் பிரதீபா மகாநாம ஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...