பாடசாலைகளை விரைவில் திறக்க கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது!

Date:

பாடசாலை மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, பாடசாலை விரைவில் திறக்க அரசு விரும்புவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். எனினும் பாடசாலைகளை விரைவில் திறக்க கல்வி அமைச்சு விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நோக்கத்திற்காக சுமார் 279,020 தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும், அவ்வாறு பாடசாலைகளை மீளத் திறக்கும் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக் கலந்துரையாடல்கள நடத்தப்படும் என்றும் கூறினார்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து அவர் ஊடகவியலாளர்கள் சந்திப்பை மேற் கொண்டார். இக்கலந்துரையாடலில் மாகாண அதிகாரிகள் மற்றும் விசேட மருத்துவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக நாங்கள் அனைத்து பாடசாலைகளையும் மூட வேண்டியிருந்தது. இருப்பினும், ஒன்லைன் கல்வி என்பது எந்த வகையிலும் ஆசிரியகள் வகுப்பறையில் மேற்கொள்ளும் கற்பித்தலைப் போன்று திருப்திகரமானதல்ல.

பாடசாலைகளைத் திறப்பபத்கு ஆயத்தப்படுத்த நீண்ட நேரம் எடுக்கும். விசேட மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே பாடசாலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் முதல் படி கல்வித் துறைசார்ந்த அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதாகும் என்றார்.

கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு சுமார் 279,020 தடுப்பூசிகள் தேவை. தடுப்பூசி ஆசிரியர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பெற்றோரின் நம்பிக்கையையும் வளர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...